1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By அ.கேஸ்டன்
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:02 IST)

இன்பாக்ஸ் அரசியல் இது தானா?: வீதிக்கு வந்த சசிகலா புஷ்பாவின் சங்கதிகள்!

காமராஜர், அண்ணா, கக்கன் போன்ற மக்களுக்காக உழைத்த அரசியல் தலைவர்களை கொண்டிருந்த தமிழக அரசியலின் மானம் தற்போது நாடே சிரிக்கும் அளவுக்கு சீரழிந்துவிட்டது.


 
 
தமிழக அரசியல் எபொழுதும் ஒருவித பரபரப்புடனே இருக்கும். திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை, மத்தியிலும் இருக்கும் அந்த அளவுக்கு தமிழகத்தின் பங்கு நாட்டில் இன்றியமையாதது. ஆனால் கடந்த காலங்களில் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் முடக்கப்படுவதும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லாத சூழலும் தான் நிலவி வருகிறது. தமிழக மக்களின் குரல் அரசின் காதில் விழுகிறதா என்ற சந்தேகம் தான் வருகிறது.
 
தேர்தலின் போது கடவுளாக தெரியும் மக்கள் தேர்தலுக்கு பின்னர் பஜ்ஜிக்கு பயன்படுத்தும் பேப்பரின் நிலமைதான். மக்கள் பிரச்சனைகளை குறித்து பேச வேண்டிய தலைவர்கள் செய்யும் இன்பாக்ஸ் அரசியல் வாடை தற்போது ஊரெல்லாம் பரவுகிறது.
 
பொதுவாக மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் என்றால் கொஞ்சம் அந்த மாதிரி கருத்துக்கள் இருக்கும். காரணம் அரசியல் நின்று வெற்றி பெருபவர்கள் யார். மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து சிறை சென்று, மக்களுக்காக வாழும் தலைவர்களா?, அதெல்லாம் அந்த காலம் அது மலையேறி போய்விட்டது.
 
தற்போது இருக்கும் அரசியல்வாதிகளின் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகளை எண்ணிக்கொண்டே இருக்கலாம், கொலை, கடத்தல், பலாத்காரம் என சட்டவிரோத பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அவர்கள் சார்ந்த கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைக்கிறார்கள்.
 
இப்படிபட்டவர்களை தேர்ந்தெடுத்தால் இவர்கள் எப்படி மக்களுக்கு உழைப்பார்கள். இதற்கு முன்னர் என்ன செய்தார்களோ அதை தான் தற்போதும், பதவி, அதிகாரம், செல்வாக்கு என அனைத்தையும் வைத்துக்கொண்டு சீரும் சிறப்புமாக செய்வார்கள்.
 
இன்னும் சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ் சம்பாதித்து ஆடம்பர, ஆபாச வாழ்க்கையை அனுபவிக்க தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசியலில் நுழைகிறார்கள். அரசியல் அங்கீகாரம் பெற என்ன வழிகள் இருக்கிறதோ எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட முடியுமோ அத்தனையும் கையாண்டு மதிப்புமிக்க அரசியலையும் தாங்கள் வகிக்கும் பதவியின் மான்பையும் சீர்குலைத்து விடுகிறார்கள்.
 
சமீபத்தில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் விவகாரத்தால் தமிழக அரசியல் நிலமையை எப்படி இருக்கிறது என சாமானிய மக்களும் எளிதில் புரிந்திருப்பார்கள்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
 
 

அதிமுகவில் மகளிர் அணிச் செயலாளர், தூத்துக்குடி மாநகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர், அதிமுக மாநிலங்களவை கொறடா என பல பதவிகளை வகித்த சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்றது. ஆனால் தற்போது அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.


 
 
இத்தனை பதவிகளை பிடிக்க அவர் செய்த இலை மறைவு காரியங்கள் தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் பிரச்சணையை பற்றி பேச டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் குடித்து கும்மாளம் அடித்துவிட்டு வாலிபர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகி முதல் முறையாக சசிகலா புஷ்பாவின் மறைந்திருந்த முகம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்னரே தூத்துக்குடி ஆட்சியரை திட்டி கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் மைக்கை அராஜகமாக அவரது கையில் இருந்து பிடிங்கிய வீடியோ வெளியாகியது.
 
பின்னர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வெட்கி தலை குனிய வைத்தது தமிழகத்தை. டெல்லியில் அவர் அடித்த லூட்டிகள் ஒவ்வொன்றாக தற்போது கசியத்தொடங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவருடனும் இவர் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வருகிறது.
 
உச்சக்கட்டமாக திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து தாக்கியது தமிழக அரசியல் நாகரிகத்தை படம்பிடித்து காட்டிவிட்டது. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க நாடாளுமன்றம் செல்பவர்கள், அவர்களுக்கு முன்மாதிரியாக நடக்கவேண்டும், இது மாதிரி அநாகரிக, முறையற்ற அராஜக போக்கில் நடந்துகொண்டால் அது உங்களுக்கு மட்டுமல்ல நீங்க சார்ந்த மாநிலத்துக்கும் அசிங்கம்.
 
மாநிலங்களவையில் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக கூறும் சசிகலா புஷ்பா, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார். தற்போது உங்களாலும், உங்கள் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்கள் கண்ணீர் வடிக்க புகார் கூறியுள்ளார்களே, அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் பெண்கள் பாதுகாப்பு எங்கே. பெண்கள் என்றால் நீங்கள் மட்டுமில்லை.
 
அரசியல் காரணங்களுக்காக, அரசியலில் காலூன்ற, நீங்கள் செய்த அசிங்க அரசியலும், அச்சில் ஏற்ற முடியாத செயல்களும் ஒவ்வொன்றாக கசிகிறதே இது தான் காமராஜர், அண்ணா, கக்கண் போன்ற தலைவர்கள் கட்டி காப்பாற்றி வந்த கண்ணியமிக்க அரசியலா?.
 
பிலால் என்பவரே தன்னை சசிகலா புஷ்பா திருமணம் செய்ததாக கூறுகிறார். தன்னுடைய மனைவி என்ற முறையில் உங்களிடம் போயஸ் கார்டனில் நடக்கும் விஷயங்களை சொன்னதாக சொல்கிறார். தேர்ந்தெடுத்து அனுப்பிய கட்சிக்கே உண்மையாக இருக்காத நீங்கள் மக்களுக்கு எப்படி உண்மையாக பணியாற்றி இருப்பீர்கள். இனிமேலும் எப்படி உண்மையாக பணியாற்றுவீர்கள்.
 
காம களியாட்டத்திலும், குடிபோதையிலும் ஊறி திளைத்த சசிகலா புஷ்பா போன்ற பல அரசியல் வாதிகளுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம், மக்கள் நலனை மறக்க ஆரம்பித்து, தங்கள் நலனே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இது போன்ற அசிங்க அரசியல் பின்னணிகள் பல உள்ளன. ஒரு நாள் அதுவும் வீதிக்கு வந்து சாமானியன் கேள்வி கேட்கும் நாள் வெகு விரைவில் உள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திருந்தி நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய முயன்றால் நல்லது.