புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (14:52 IST)

காஞ்சனா நடிகையின் ரொமான்டிக் வீடியோ பாடல்!

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் 2007ம் ஆண்டு வெளியான  முனி படத்தில்  ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து  சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி , அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
 
தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடிக்கிறார். 
 
அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் பல மர்மங்கள் திகில் படமாக இருந்தது. மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் வருகிற புத்தாண்டை முன்னிட்டு மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 13ஆம் தேதி ரிலீசாகிறது. தற்போது இப்படத்தின் ரொமான்டிக் வீடியோ பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.