1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 12 மே 2015 (14:52 IST)

ஆல் இஸ் வெல் - அசினுடன் நடிக்கும் சோனாக்ஷி சின்கா

இந்தியில் கொடிநாட்ட புறப்பட்ட நடிகை அசினை கொஞ்ச நாள்களாக காணவில்லை. அவர் நடித்த படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். ஒரேயொரு படம்தான் கைவசம் உள்ளது. ஆல் இஸ் வெல்.
அபிஷேக்பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் இந்தப் படத்தில் அசின் ஹீரோயின். உமேஷ் சுக்லா இயக்கம். படம் முடியும் நிலையில் சோனாக்ஷி சின்காவையும் படத்தில் இழுத்திருக்கிறார்கள். அவருக்கு படத்தில் சிறப்புத் தோற்றமாம். 
 
அசின் நடிப்பதை கண்டு கொள்ளாத ஊடகங்கள், சோனாக்ஷி துண்டு வேடத்தில் நடிப்பதை அறிந்ததும் அதுபற்றி செய்திகளாக வெளியிட்டு அசினின் பிபியை எகிற வைக்கின்றன. உமேஷ் சுக்லா இயக்கிய ஓ மை காட் படத்தில் சோனாக்ஷி ஒரு அயிட்டம் பாடலுக்கு ஆடியிருக்கிறார். அந்த ராசியை வைத்து இதிலும் ஒரு சின்ன வேடத்தை தந்திருக்கிறார் உமேஷ்.
 
உமேஷின் சென்டிமெண்ட் அசினுக்கா ஆப்பு வைக்க வேண்டும்?