செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : புதன், 31 மே 2017 (15:41 IST)

படப்பிடிப்பு தளத்தில் காயங்களுடன் விபத்திலிருந்து தப்பிய ஷாருக்கான்

ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். மும்பை ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 
 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் செட்டின் சீலிங் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக ஷாருக்கான் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
 
மேலும், பட குழுவை சேர்ந்த இரண்டு பேர் இந்த விபத்தில் சிக்கி உள்ளதாகவும், அதில் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.