திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By sinoj
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (23:20 IST)

நான் உயிருடன் இருக்கிறேன் - தேசிய விருது நடிகை

தமிழ், தெலுங்கு  சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாரதா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான மிஸ்டர் பாரத் என்ற படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்தார்.

அதன் பின், பல்வேறு மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடுஇத்த வந்த நடிகை சாரதா சில நாட்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவர் இறந்துவிட்டதாக யாரோ புரளியைக் கிளப்பவே அவர்ம், தான் நலமுடன் இருப்பதாகக் கூறி  தன்னிலை விளக்கம் கொடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவர் சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது