புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:43 IST)

அப்னா டைம் ஆயேகா! ஆஸ்கர் வெல்வான் கல்லி பாய்! – மகிழ்ச்சியில் அலியா பட்!

இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கான பரிந்துரையில் கல்லி பாய் படம் அனுப்பப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை அலியா பட்.

ரன்வீர் கபூர், அலியா பட் இணைந்து நடித்து கடந்த வருடம் இந்தியில் வெளியான படம் கல்லி பாய். கல்லி என்றால் சேரி என்று பொருள். சேரியில் பிறந்து பிரபல ராப் பாடகராக மாற ஆசைப்படும் ரன்வீர் சிங். மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஹைக்ளாஸ் இஸ்லாமிய பெண் அலியா பட். இருவருக்கும் பள்ளி வயதிலிருந்தே காதல். ரன்வீர் சிங்கின் கனவுகள் நினைவாக அவனுக்கு எப்போதும் துணையாக இருக்கிறார் அலியா.

சித்தி மற்றும் தந்தை அடித்து விரட்டியதால் தாயுடன் தனியாக வாழும் ரன்வீர், அம்மாவுக்காக தன் பாடகர் ஆசையை கைவிட்டு சாதாரண ஆபீஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். தான் நினைத்ததை அடைய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை பயன்படுத்தி “கல்லி பாய்” என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் பிரபலம் ஆகிறான் ரன்வீர்.

இந்த படம் வெளியான நாள் தொட்டு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் இடம் பெறும் “அப்னா டைம் ஆயேகா (எனக்கான நேரம் வரும்)” வரியை பலர் டீசர்ட்டுகளில் பிரிண்ட் செய்து போட்டு கொண்டார்கள். கிட்டதட்ட 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது கல்லி பாய்.

தற்போது ஆஸ்கருக்கு இந்த படம் தேர்வாகியிருப்பது குறித்து பேசிய அலியா பட் “கல்லி பாய் ஆஸ்கருக்கு சென்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடித்த படம் ஆஸ்கருக்கு செல்வது இதுவே முதல்முறை. கல்லிபாய் கண்டிப்பாக ஆஸ்கர் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.