திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2018 (14:43 IST)

எமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு நிச்சயதார்த்தம்

நடிகர் எமி ஜாக்சனின் முன்னாள் காதலர் பிரதீக் பப்பருக்கு லக்னோவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி கெத்து, தெறி, ஐ, தங்க மகன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 
 
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கான ஏக் தீவானாத்தா திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பிரதீக் பப்பருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகை எமிஜாக்சனும், பிரதீக் பப்பரும் காதலித்து வந்தனர். நயந்தாராவைப் போல் எமியும் காதலரின் பெயரை தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். நெருக்கமான உறவில் இருந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரதீக் மற்றும் எமியின் காதல் முறிந்தது.
 
இதனையடுத்து எமி ஜாக்சனுக்கு பிறகு பிரதீக் பப்பர், சன்யா சாகர் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பிரதீக், சன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் லக்னோவில் நேற்று விமர்சையாக நடைபெற்றது.