வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (09:59 IST)

வீட்டில் இருந்தபடியே ஓயாமல் பணம் சம்பாதிக்கும் திஷா பதானி!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவதுடன் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார்.

மேலும், உள்ளாடை விளம்பரங்களுக்கு பெயர் போன திஷா பதானி தற்ப்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நேரத்திலும் வித விதமான விளம்பரங்களில் நடித்து வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதித்து வருகிறார். தற்ப்போது பிரபல shampoo விளம்பரம் ஒன்றிற்கு நடித்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதேபோல் இதற்கு முன்னர் drools விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.