அனுஷ்கா - கோலி ஷாப்பிங் செய்யும் வைரல் புகைப்படம்


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (16:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் காதலிப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவ்வப்போது இருவருக்கும் இடையே சண்டை என பல செய்திகள் வெளிவருவது சகஜம். இந்நிலையில் தற்போது அனுஷ்காவும் கொலியும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 
 
விடுமுறையை கொண்டாட இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஷாப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :