வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (21:01 IST)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலினியா டிரம்ப் பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தனர்.

பிரிட்டன் பயணம்
 
பிரிட்டனில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு (பிரிட்டன் நேரப்படி) ஸ்டான்ஸ்டெட் விமானதளம் சென்றடைந்தார்.
லண்டன், மான்செஸ்டர், பெல்பாஸ்ட், பிர்மிங்ஹாம் , நாட்டிங்ஹாம் உள்பட பிரிட்டன் முழுவதும் டிரம்பின் பயணத்தின்போது போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
 
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் த சன் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார்.
 
பிரெக்ஸிட் கட்சி தலைவர் நிகெல் ஃபராஜ், ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறும் அரசின் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென "த டைம்ஸ்'-யிடம் டிரம்ப் கூறியுள்ளார்.
 
வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு திங்கள்கிழமை சுற்றுலா மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப், இளவரசர் சார்லஸ், கான்வால் சீமாட்டி கமிலா ஆகியோரை சந்திக்கிறார்.
 
சுசெக்ஸ் சீமாட்டிக்கு (இளவரசர் ஹாரியின் மனைவி) சமீபத்தில் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகாத நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
 
பிரிட்டனில் பிரபல அமெரிக்கர்கள் கலந்துகொள்ளும் விருந்தினர் கூட்டத்தில் அதிபர் டிரம்பும், எலிசபெத் அரசியும் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரதமர் தெரீசா மேயோடு அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
 
கடந்த ஆண்டு பிரிட்டனில் பயணம் மேற்கொண்டபோது, டிரம்பின் பாதுகாப்புக்கு ஆன செலவு 18 மில்லியன் டாலராகும்.
 
இந்த பயணத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த அதிரடி படையை கொண்டிருப்பதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.