ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (20:26 IST)

இந்துக்களை இழிவுபடுத்தியதற்காக அமைச்சரை நீக்கியது பாகிஸ்தான் மாகாண அரசு

இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
ஒரு காணொளி மூலமாக செய்தி அனுப்பியுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ''இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல'' என்றார்.
 
இந்துக்கள் உள்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், புண்படுத்தும் கருத்துக்களையோ செயல்களையோ, பஞ்சாப் அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
இந்துக்களை புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டதற்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரீக் - இ - இன்சாஃப்பின் அதிகாரபூர்வ ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
''பாகிஸ்தான் கட்டமைக்கப்பட்டது சகிப்புத்தன்மை எனும் முதல் தூணால்தான்'' என்கிறது அந்த ட்வீட்.