1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (17:18 IST)

வெளிநாட்டு நாணயங்களுக்கு தாலிபன்கள் தடை

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தாலிபன்கள் தடை விதித்துள்ளனர்.

ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஆப்கன் பொருளாதாரத்தை இந்த முடிவு மேலதிக பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளது.
 
பொருளாதார சூழ்நிலை மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஆப்கானியர்கள் அனைவரும் 'ஆப்கனி' நாணயத்தை, தங்களது அனைத்து வர்த்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
 
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன.
 
ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களால் பன்னாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆப்கானியர்கள் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க டாலரே பயன்படுத்தப்பட்டது.