1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (20:53 IST)

திட்டமிட்டபடி 11 கைதிகளுக்கு மரண தண்டனை: இந்தோனேசியா

சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலும் பதினொரு கைதிகளின் மரணதண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கும் தமது நாட்டின் உரிமையில் எவரும் தலையிடக் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
துப்பாக்கிச் சூட்டு அணியினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளவர்களுள் ஆஸ்திரேலியா, பிரேசில், மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளும் அடங்குவர். பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அதிபர் வெளிநாட்டுத் தலைவர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.
 
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கும் வகையில் கருணை மனு அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என அதிபர் ஏற்கனவே தீர்மானித்ததுள்ளார். அறிவிக்கப்பட்ட மரண தண்டனையில் காலதாமதம் ஏற்படாது என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.
 
ஏதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியப் பிரஜைகள் இருவராலும் மேற்கொள்ளப்பட்ட இறுதி சட்டபூர்வ வழிமுறைகளையும் இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. மரண தண்டனையை எதிர்கொண்டிருப்பவர்களில் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரனும் அடங்குவார்.