பதவிவிலகும் சாமுராய் தேசத்தின் அரசர்

king
Last Modified செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (09:38 IST)
வயது மூப்பின் காரணமான  சாமுராய் தேசத்தின் அரசர் அகிஹிட்டோ தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார். அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
 
"என் வயதின் காரணமாக என்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. என் உடல்நிலை நலிந்து வருகிறது" என்கிறார் அவர். இந்த அறிவிப்பு அரசரின் மீது பரிவை உண்டாக்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றாலும், தேசத்தின் அடையாளமாக அவர் இருப்பார்.

இதில் மேலும் படிக்கவும் :