செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 14 மே 2014 (14:18 IST)

இந்திய மல்யுத்தம்

இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் பாரம்பரிய வீர விளையாட்டு மல்யுத்தம். மும்பையின் ஏழ்மையான பகுதியிலுள்ள மல்யுத்த கழகம் ஒன்றுக்கு பிபிசியின் டான் ஐசாக்ஸ் சென்று எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு இது.


குஸ்தி என்று சொல்லப்படுகின்ற இந்திய மல்யுத்தம் இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு விளையாட்டு. மும்பையிலுள்ள மஹாத்மா ஃபூல் வியயம் மந்திர் என்ற இடத்தில் மூன்று மணி நேரம் மல்யுத்தப் பயிற்சிக்காக வீரர்கள் கூடுகின்றனர்.

காலை 4 மணி முதல் 7 மணி வரை ஒரு குழுவும், அதேபோல மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஒரு குழுவும் இங்கு பயிற்சியில் ஈடுபடுகின்றது.


கிராமப் புறங்களில் வீட்டில் ஒரு பிள்ளையை மல்யுத்தம் பழக அனுப்பும் பாரம்பரியம் இப்பகுதியில் உள்ளது.


மேற்குலகத்தில் சில சமூகங்களில், ஏழ்மையிலிருந்து வெளிவர உதவும் ஒரு வழியாக குத்துச்சண்டை பார்க்கப்படுவதைப்போல இங்கே மல்யுத்தம் பார்க்கப்படுகிறது எனலாம்.


எட்டு வயது முதற்கொண்டே இங்கு சிறார்களுக்கு மல்யுத்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.


ஒரு சதுரக் குழுயில் எண்ணெயில் ஊறிய களிமண் நிரப்பப்பட்டுள்ள இடத்தில் இவர்கள் மல்யுத்தம் பயில்கின்றனர். இந்தக் களிமண்ணை அவர்கள் மேனியில் பூசிக்கொள்கின்றனர்.


இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்துவருகிறது. ஆனாலும் முக்கிய போட்டிகளை இருபதாயிரம் பேர் வரை பார்க்க வருகின்றனர்.


சில மல்யுத்த வீரர்கள் கிராமம் கிராமமாக சென்று பணம் வாங்கிக்கொண்டு சண்டையிடுகின்றனர். பெரிய வீரர்களாக கருதப்படுபவர்கள் வருடத்துக்கு எட்டு ஒன்பது லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


பாலில் பாதாம், நெய், சீனி கலந்த ஒரு பானத்தை இவர்கள் வலிமைக்காக உட்கொள்கின்றனர். இந்த பானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவுக்கு இவர்கள் சாப்பிடுகின்றனர்.


தங்களுடைய மல்யுத்தத்துக்கு உதவுவதற்காக இவர்கள் சில நேரம் பளுதூக்கும் உடற்பயிற்சியும் செய்கின்றனர். ஆனால் உடல் வலிமையால் மட்டும் ஜெயிக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கடந்த காலங்களில், பாரம்பரிய இந்திய மல்யுத்தம் பயின்ற வீரர்கள் சிலர் ஒலிம்பிக் வரை சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.