புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (15:23 IST)

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களின் மருத்துவ செலவுகள் குறித்து மாநில அரசே நிர்ணயிக்கும் என்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.