கிறிஸ்துவ மத சேவையான திருப்பலி அல்லது நற்கருணையின் போது இந்த மது பயன்படுத்தப்படும்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்ட தடையின் நீட்சியாக கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித மதுவை தயாரிக்கும் உரிமம் ரத்து செய்துள்ள நடவடிக்கை வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் அளிக்கப்படும் திருப்பலி ஒயினை (மதுவை) தயாரிக்கும் மது தயாரிப்பு கூடத்தின் பொறுப்பாளராக உள்ள ஒரு மத குரு இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், இந்த விஷயத்தில் அரசுடன் சமரசம் எட்டப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
தற்போதைய செயல்முறையை தொடர்ந்து கடைப்பிடித்து, தயாரிக்கும் மதுவை, ஒயின் என்றழைக்காமல் திராட்சை சாறு என்று அழைத்துக் கொள்ளலாமா என்று ஒரு கருத்து உலவுவதாக கூறப்படுகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்