வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (21:13 IST)

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அயர்லாந்திடம் 85 ரன்களில் ஆட்டமிழப்பு

உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிவரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் இந்த டெஸ்ட் (4 நாட்கள் போட்டி) நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
உலகக்கோப்பையில் அசத்திய தொடக்க வீரர் ஜேசன் ராய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
உலகக்கோப்பையை வென்ற பின்னர் இங்கிலாந்து விளையாடும் முதல் போட்டி இது; மேலும் முதல்முறையாக இங்கிலாந்துடன் அயர்லாந்து மோதுகிறது என்பதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால், அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.அயர்லாந்து பந்துவீச்சாளர் முர்டாக் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
 
டென்லி, சாம் கரண் மற்றும் ஸ்டோன் ஆகிய மூன்று வீரர்களை தவிர இங்கிலாந்து தரப்பில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.