வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (15:22 IST)

பிரம்மபுத்திரா ஆற்றுக்கு கீழே சுரங்கச் சாலை அமைக்க இந்தியா திட்டம்

பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.
 
பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.
 
மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16 ஆம் தேதி விளம்பரப்படுத்தியது. இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அடியில் நான்கு வழிச் சாலை கொண்ட சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
 
அசாமையும், அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சாலையில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முழு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்காக எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது என அசாம் பா.ஜ.க தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் ட்வீட் செய்துள்ளார்.