செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (21:44 IST)

போரிஸ் ஜான்சன்: யார் இந்த பிரிட்டனின் புதிய பிரதமர்? 10 முக்கிய தகவல்கள்

பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். 
 
அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன.
 
தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக போரிஸ் ஜான்சன் பணியாற்றியுள்ளார். குழப்பவாதியாகவும் அல்லது ஒழுங்கற்றவராகவும் போரிஸ் ஜான்சன் அறியப்படுகிறார்.
 
இவர் பத்திரிகை துறையில் இருந்தபோது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருபாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்வியெழுப்பினார். பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார்.
 
வார இதழில் உண்மைக்கு புறம்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதால் போரிஸ் ஜான்சன் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
2001ல் ஹென்லி-ஆன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்பி ஆகிறார் போரிஸ் ஜான்சன். 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
2008ல் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென் ரூய்லிப்பின் எம்பியாக நான்குகாண்டுகள் இருந்தார்.
 
பிரதமராவதற்குமுன், இரண்டாண்டுகள் (2016 லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்தார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் போரிஸ், 2017 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, முன்னறிவிப்பற்ற நியூயார்க் பயணத்தில், டிரம்பின் முக்கிய ஆலோசகர்களை சந்தித்துள்ளார். இது அப்போது, பெரும் விவாதத்தை கிளப்பியது.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவர் போரிஸ் ஜான்சன்.