வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 20 மே 2020 (00:17 IST)

அரிதான பல் இல்லாத டைனோசர்

ஆஸ்திரேலியாவில் 110மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எல்ஃப்ரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள்.

இந்த படிமம் மெல்பர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட தன்னார்வலர் ஜெசிகா பார்கரால் கண்டறியப்பட்டது.
அந்த படிமத்தை ஆராய்ந்தபோது அதற்கு நீண்ட கழுத்துகளும், குட்டையான கைகளு
ம், லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த விலங்கு இரண்டு மீட்டர் நீளத்தில் இருந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் டான்சானியா, சீனா, அர்ஜென்டினாவில் கிடைத்த படிமங்கள் 6 மீட்டர் நீளம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தவகையான எல்ஃப்ரோசர் டைசோனர்கள் வளர்ந்த பிறகு அதிகளவிலான இறைச்சியை உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் இளம் வயது டைனோசர் மண்டை ஓடுகளில் இருந்த பற்கள் வளர்ந்த விலங்குகளின் மண்