புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:34 IST)

அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்!

Monthly astro
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞசம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
06-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024  அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமும் மனதில் குழந்தை போலும் இருக்கும் மகர ராசியினரே நீங்கள் பழகினால் இனிமையானவர்.

இந்த மாதம் காரிய தடைகளை மீறி வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்க ளிடம் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் கருத்துவேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையாக வும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.

மாணவர்களுக்கு  அதிக நேரம் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்ஹ ஸ்வாமியை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21