செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:43 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

 
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்: 
குடும்பத்தில் கலகலப்புடன் இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும்  வரலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடையமுடியும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் மனைவி, பிள்ளைகளாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளை எதிர்   கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள்.

சித்திரை 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும்.

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5