ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (12:24 IST)

வரலட்சுமி நோன்பு - சுவாரஸ்யங்கள்

நமது கலாச்சார, பண்பாட்டு வழக்கங்களில் ஒன்றாக திகழும் வரலட்சுமி விரதம் இன்று விமர்சையாக வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் வரலட்சுமி, வரங்களை அள்ளி வழங்க, வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம்



வரலட்சுமி விரதம் குறித்தும், அன்று செய்ய வேண்டியவை குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

திருமணமான பெண்கள் தங்களின் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ செழிப்போடு, நலமாக வாழவேண்டுமென்பதற்காகவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமென்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.
பெரும்பாலான வீடுகளில் அம்மன் முகத்தை இழை கோலம் போட்ட பலகையில் வைத்து அவர்களின் வசதிபோல் அலங்காரம் செய்து புத்தகத்தில் போட்டிருப்பதுபோல் பூஜை செய்வார்கள்.

நைவேத்தியத்திற்கு கொழுக்கட்டை, பச்சரிசி இட்லி, உளுந்து வடை அப்பம், பால் பாயசம் போன்றவற்றை செய்கிறார்கள்.

சிலரின் வீட்டில் இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்வதுண்டு.

வீட்டில் உள்ள அனைவரும் நோன்பிற்காக, வீட்டை சுத்தம் செய்து, வரலட்சுமி தாயின் புகைப்படத்தையோ, கலசத்தையோ வைத்து, அதை விருப்பம் போல அலங்கரித்து, கடையில் கிடைக்கும் நோன்பு கயிற்றை வைத்து பூஜை செய்யகிறார்கள்.

பூஜையில் பழங்கள்(ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மாம்பழம், கொய்யா), பூ, தாலிகயிறு, மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு(மஞ்சள் கயிறு), புது புடவை ரவிக்கை, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை வைத்து வரலட்சுமி தாயை பூஜித்து வீட்டில் உள்ள பெரியவர்களிடமிருந்து அல்லது கணவரிடமிருந்து பூ, பூடவை வாங்கிக் கொண்டு, பூஜையில் வைத்த நோன்பு கயறை கட்டிக் கொள்வார்கள்.

வரலட்சுமியின் அருளால் அனைவரது வீட்டிலும் மகிழ்ச்சியும், நலமும் பொங்கிட வாழ்த்துக்கள்.