வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

முடி உதிர்தல் மற்றும் மலச்சிக்கலை சரிசெய்யும் வாத நாசக முத்திரை

வாத நாடி கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும்.

மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை,ரத்த ஓட்ட குறைவால் உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள் (ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய  நோய்குறிகள் தோன்றும் அவைகளுக்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை ஆகும்.
 
ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டியபடி இருக்கட்டும். இதுவே  வாத நாசக முத்திரை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் மிகுந்த பலனளிக்கும். 30  வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.
 
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனியில் கட்டை விரல் அடிப்பகுதியில் கட்டை விரல் இவ்விரு விரல்கள் மீதும் பதிய வேண்டும்.
 
பலன்கள்:
 
தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது. மூளையின் செய்ல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும் சீராக்குகிறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்  போக்குகின்றது.