Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதுகு, வயிறு சம்பத்தப்பட்ட நோய்கள் நீக்கும் பாதஹஸ்தாசனம்

முதுகு, வயிறு சம்பத்தப்பட்ட நோய்கள் நீக்கும் பாதஹஸ்தாசனம்

Sasikala|
பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலை தளர்த்தி குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும்.முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும்.
 
முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரல்களை பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் முலன்காளுக்குப் பின்னல் கட்டி, கிட்டி போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் முழு நிலை அடையலாம். ஒரு முறைக்கு 1௦ முதல் 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
 


பலன்கள்:
 
முதுகு தசைகள் நன்றாக இளகுவாக்கப்பட்டு பலம் பெரும். அடி வயிற்று உறுப்புகள் அழுத்தப்பட்டு புத்துணர்வு பெரும். வயிறு சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
 
நீரிழிவு, மலட்டுத்தன்மை, வயிற்றுவலி, அஜீரணம், தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்புவலி, நரம்பு பலவீனம், இரத்தவியாதி, பசியின்மை, மலேரியா கட்டி, பித்த சோகை, வாதங்கள், பெண்கள் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும், இளமை உண்டாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :