வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

தட்டையான வயிற்றை பெற உதவும் ஆசனங்கள்!!

நீங்கள் தட்டையான வயிற்றை பெற, தினசரி முறையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். அதன் பிறகு உடலின் குறிப்பிட்ட  பகுதிகளுக்காக சிறப்பு பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கலாம். தட்டையான வயிற்றை பெற குறிப்பாக உடலின் நடுப்பகுதியில் அதிக  கவனம் செலுத்த வேண்டும். யோகாசனங்கள் செய்து வருவது உங்கள் அடிவயிற்றை இறுக்கமாக்கவும், நல்ல வளைவுத்திறனைப் பெறவும்  உதவும்.
ஹாலாசனம்
 
ஹாலாசனம் என்பது உங்கள் வயிற்று தசைகளை டோன் செய்ய மிகவும் ஏற்றது. கால் விரல்களால் மறுபுறம் தரையைத் தொடும் வரை  கால்களை வளைக்கவும். உங்கள் கைகளைப் பயன்படுத்தி, உங்கள் இடுப்புக்கு ஆரம்பக்கட்டத்தில் அழுத்தம் தரலாம். மெதுவாக மூச்சு விடவும்,  உங்களால் முடிந்தவரை அதே நிலையில் இருக்கவும். பிறகு இரண்டு கால்களையும் ஆரம்ப நிலைக்கு மீண்டும் கொண்டு வரவும். இதே  நிலையை வைத்திருக்கும்போது, உங்கள் கைகளை இரண்டு புறமும் விரித்து வைக்கலாம். 
 
நவாசனம்
 
உடலின் மையப்பகுதியில் கொழுப்பைக் குறைப்பதற்கு இந்த ஆசனம் முகவும் ஏற்றது. கால்களை முன்னால் நீட்டவும். கைகளை இடுப்புக்கு  சற்று கீழே வைத்திருக்கவும். பிரகு பின்னோக்கி சாயவும், ஆனால் முதுகெலும்பை வளைக்கக் கூடாது. மூச்சை வெளியே விட்டு உங்கள்  கால்களை தரையில் இருந்து 45 டிகிரி கோணத்திற்கு உயர்த்த வேண்டும். முட்டிகளை மடக்காமல் வைத்து உங்கள் கால் விரல்களை உங்கள்  கண்கள் இயரத்திற்கு உயர்த்தவும். அவை பார்ப்பதற்கு ‘v' போன்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
மத்யாசனா
 
அடிவயிற்றுப் பகுதியை இறுக்கமாக்க இது மற்றொரு சிறந்த ஆசனம். உங்கள் முதுகு தரையில் படுமாறு மேட்டில் படுக்கவும், முட்டிகளை வளைத்து, உங்கள் பாதங்கள் தரையில் படுமாறு வைக்கவும். மூச்சை இழுத்து, உங்கள் இடுப்புப் பகுதியை தரையில் இருந்து மேலே உயர்த்தவும். உங்கள் உள்ளங்கைகளை உங்கள் இடுப்புக்கு கீழே வைக்கவும். உங்கள் மொத்த இடுப்புப் பகுதியையும் கைகளின் மேல்  வைக்கவும். மூச்சை இழுத்து, உடலின் மேல் பகுதியையும் உயர்த்தி, மேட்டில் இருந்து நகர்த்தவும். மூச்சை வெளியே விட்டு, மீண்டும் பழைய  நிலைக்குத் திரும்பவும்.