1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (12:31 IST)

பாய்ந்து வந்த யானை; பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர்!

ஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று சுற்றிக்காட்டும் வனசுற்றுலா வழிகாட்டாளர்(சபாரி கைடு). இவர் பயணிகளை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றபோது ஒரு அதிசயத்தக்க நிகழ்வை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

பயணத்தின் இடையில் நடுக்காட்டில் ஓரிடத்தில் அவர் பயணிகளுக்கு காட்டை சுற்றிக்காட்டி கொண்டிருக்கும் போது ஒரு பெரிய ஆண் யானை அவரைத் தாக்க வேகமாக ஓடி வந்துள்ளது. அதைப் பார்த்து பயணிகள் அதிர்ந்துள்ளனர். ஆனால் ஸ்மித் எந்திவித அதிரிச்சிக்கும் உள்ளாகாமல் அமைதியாக அந்த யானையையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நோக்கி ஓடி வந்த அவரின் பார்வையால் கட்டுண்டது போல அப்படியே சிலை போல உறைந்து நின்று விட்டது.

அவரையே சில நிமிடங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அந்த யானை சில நொடிகளுக்குப் பிறகு திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இதைப் பார்த்து வியந்த பயணி ஒருவர் அதை தனது கேமிராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த யானை அப்படி அவருக்குக் கட்டுப்பட்டதற்குக் காரணம் பேச்சிடெர்ம் என சொல்லப்படும் யானை, காண்டா மிருகம் போன்ற பெரிய விலங்குகள் சிறிய விலங்குகளை விட அதிகமாக உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை என்றும் அவற்றால் மனித உணர்ச்சிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.