வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By bharathi
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (10:59 IST)

கொரில்லா குட்டியை பாடாய்படுத்தும் சுட்டி: வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் இரண்டு வயது கொரில்லா குட்டியுடன் சிறுவன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் காமோலி எனும் இரண்டு வயதுடைய கொரில்லா குட்டி தனது தாயுடன் வசித்து வருகிறது. மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் காமோலியை 2 வயது சிறுவன் ஒருவன் பாடாய் படுத்தியுள்ளான். தனது பெற்றோருடன் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஐசக் என்ற சிறுவன் அங்கிருந்த காமோலியுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டது கொள்ளை அழகு. பார்ப்போர் மனதை கொள்ளையடிக்கும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.  .