செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:34 IST)

பொழப்பே சிரிப்பா சிரிக்குது.. அதிகம் சிரிக்காத ஆண்கள்! – ஆய்வில் தகவல்!

உலகம் முழுவதும் சிரிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்கள் அதிகம் சிரிப்பதில்லை என தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும் நகைச்சுவை செய்வதும், சிரிப்பதும் மனிதனுக்கு தனி அம்சமாக உள்ளன. சிரிப்பது மனதில் உள்ள கஷ்டங்களை மறக்க உதவுவதுடன், உடல்நலத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. இதனாலேயே பல்வேறு நாடுகளிலும் திரைப்பட, நாடக நகைச்சுவை நடிகர்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் மனிதர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சிரிக்கிறார்கள் என்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த டேல் பல்கலைகழகம் ஆய்வை நடத்தியுள்ளது. அதில் தினசரி பெண்கள் 62 முறை சிரிப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் மிகவும் குறைவாக ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே சிரிக்கிறார்களாம். ஆண்கள் அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என சமூகம் குறிப்பிடுவதே அதற்கு காரணம் என கூறப்படுகின்றது.