வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:05 IST)

உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் - இங்கிலாந்து நிறுவனம் வடிவமைப்பு

உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்திருக்கின்றது.
 

 
பிரிட்டனைச் சேர்ந்த Centre for Process Innovation என்னும் நிறுவனம், ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட் ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டு வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்த்தபடி பயணம் செய்ய முடியும்.
 
மேலும் இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.