திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:22 IST)

மியான்மரில் ராணுவ ஆட்சி: உலக வங்கி கூறும் அதிர்ச்சி கருத்து!

மியான்மரில் ராணுவம் திடீரென ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறித்து உலக வங்கி கூறிய அதிர்ச்சி தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று மியான்மரில் திடீரென ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆன் சாங் சூகி உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி முறைகேடு செய்து ஆட்சியைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மியான்மரின் ஏற்கனவே கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் பின்னடைவில் உள்ள நிலையில் தற்போது ராணுவ ஆட்சியால் மேலும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது