1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (16:26 IST)

20 வருடங்களாக நிர்வாணமாக துன்புறுத்தல்: பைத்தியமான பெண்!

அர்ஜெண்டினாவில் 20 வருடங்களாக இளம்பெண் ஒருவரை நிர்வாணமாக கட்டி போட்டு துன்புறுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
குறிப்பிட்ட வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக பக்கத்து வீட்டில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது.
 
42 வயதான அந்த பெண்ணை கடந்த 20 வருடமாக நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர். தனது இளம் வயதில் அந்த பெண்ணுக்கு ஆண் நண்பர் இருந்ததால் இந்த கொடூர தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்டதாம்.
 
மேலும், இந்த பெண்ணின் தந்தை இறந்த பின்னர், இந்த துன்புறுத்தல்களை அவரது சகோதரர் துவங்கியுள்ளார். இதனால் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இவ்வளவு நடந்த பின்னரும் அந்த பெண்ணின் சகோதரரை கைது செய்யாமல் விசாரணாஒயை மட்டுமே நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.