1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (18:15 IST)

பெண்ணின் கண்ணில் 27 காண்டாக்ட் லென்ஸ் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணின் கண்ணிலிருந்த ஏராளமான காண்டாக்ட் லென்சுகளை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.


 

 
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 67 வயதான ஒரு பெண் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், அவரது கண்ணில் 17 காண்டாக்ட் லென்சுகள் இருந்தன. 
 
அதன் பின் மீண்டும் அவரது கண்ணை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கண்ணில் மேலும் 10 லென்சுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, தன்னுடைய கண்ணில் வெகுநாட்களாக உறுத்தல் இருந்து வந்ததாகவும், முதுமை காரணமாக அப்படி இருக்கிறது என எண்ணி அலட்சியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
அதன்பின் அறுவை சிகிச்சை மூலம் அந்த காண்டாக்ட் லென்சுகளை மருத்துவர்கள் அகற்றினர். மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை செய்யாமல், ஆன்லைனில் காண்டாக்ட் லென்சுகளை ஆர்டர் செய்வதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.