காதில் சிக்கிய குட்டி மலைப்பாம்பு
அமெரிக்க ஒரிகான் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் காதில் கம்மல் மாட்டும் பகுதியில் சிக்கிக்கொண்ட தன் செல்லப்பிராணி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் , அங்கிருந்து, தன்னுடைய புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளார். அதில், இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் மிக விநோதமான தருணங்களில் ஒன்று என்றும், தன்னுடைய மலைப்பாம்பு கம்மல் மாட்டும் பகுதியில் சிக்கிக் கொண்டதால் அவசர அறைக்கு சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பார்ட் என்ற பெயர் கொண்ட ஒரு மலைப்பாம்பை தான் கையில் வைத்திருந்ததையும், அது காதில் உள்ள ஓட்டை ஒன்றின் வழியாக அது சென்றதை கூறவும் ஃபேஸ்புக்கில் ஆஷ்லே கிளாவில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையிலும், தன்னுடைய மலைப்பாம்பை நினைத்து கவலைப்பட்டாராம் ஆஷ்லி . ஆனால் எல்லாமே நல்லபடியாக முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தன்னுடைய காதை அறுக்காமல், காதை மரத்துப் போக வைத்ததாகவும், காதுத்துவாரத்தை விரிய வைத்து, அதில் சற்று சோப்பு போன்றவற்றை செலுத்தி மலைப்பாம்பை எடுத்ததாகவும் இணையத்திலிருந்த தன்னுடைய நண்பர்களிடம் கூறினார் ஆஷ்லே.
பார்ட் மலைப்பாம்பு நலமாக இருக்கிறதாம்.