வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (18:03 IST)

ஒரு பிரதமர் கூட முழுமையாக ஆட்சி செய்யவில்லை: என்ன நடக்கின்றது பாகிஸ்தானில்?

பாகிஸ்தானில் இதுவரை ஒரு பிரதமர் கூட முழுமையாக ஆட்சி செய்யவில்லை என்றும் கடந்த 75 ஆண்டுகளில் இதுவரை 22 பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்து உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
பாகிஸ்தானில் தற்போது பிரதமராக இருக்கும் இம்ரான்கான் விரைவில் ராஜினாமா செய்ய போவதாகவும் அவரது அரசுக்கு ஆதரவு அளித்த முக்கிய கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட முழுமையாக பிரதமர்கள் ஆட்சி செய்யவில்லை என்ற மோசமான சாதனை  பட்டியலில் இம்ரான்கானும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது