ஒமிக்ரானால் புதிய வேரியண்ட் உருவாகும் அபாயம்! – உலக சுகாதார அமைப்பு!
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிப்பால் புதிய வேரியண்ட் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் வெவ்வேறு வேரியண்ட்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் இந்த பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் தற்போது மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து எச்சரித்துள்ள ஐரோப்பிய உலக சுகாதார அமைப்பு “தற்போது பரவி வரும் ஒமிக்ரான், டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தினாலும், வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் ஒமிக்ரான் புதிய வைரஸ் வேரியண்டை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. அந்த வேரியண்ட் ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்” என கூறியுள்ளது.