டெல்டாவை விட மோசமான தொற்று வரப்போகிறது! – எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா வகை கொரோனாவை விட மோசமான வைரஸ் தாக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பல நாடுகளில் வீரியமடைந்த வேரியண்டாக பரவி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வேரியண்டுகளை ஆல்பா, டெல்டா என பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புதிய வேரியண்ட் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானம் “உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வந்தாலும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதில் 75 சதவீதம் 10 நாடுகளுக்குள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசி அதிகமானோருக்கு செலுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்டா வேரியண்ட் கொரோனாவை விட வீரியமிக்க கொரோனா வேரியண்ட் உருவாகும் சாத்தியமும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.