செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:44 IST)

உக்ரைன் அகதிகளை வரவேற்க தயார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு!

உக்ரைன் அகதிகளை வரவேற்க தயார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருந்து அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு அந்நாட்டின் மக்கள் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்கத் தயார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
செர்னோபில் அணுஉலை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப் பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தனது கவலையை தெரிவித்துள்ளது