வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 மே 2015 (19:30 IST)

சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டவருக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான புதிய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
அரசின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படவுள்ள புதிய தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அபராதம் ஆகியவை அடங்கும்.
 
வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் புதிய குடியிருப்புகளை மட்டுமே வாங்க முடியும். பழைய குடியிருப்புகளை அவர்கள் வாங்கத் தடையுள்ளது.
 
நாட்டில் சட்டம் தெளிவாக இருந்தாலும், அதை நடைமுறைபடுத்துவது சிறிய அளவிலேயே உள்ளது என அரசு வாதிடுகிறது.
 
ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை உயர்வதற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
இதையடுத்து சிட்னி, மெல்பர்ண் நகரங்களில் உள்ளூர் மக்கள் வீடுகள் வாங்க முடியாத சூழல் உள்ளது என்று கூறப்படுகிறது.