திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (16:56 IST)

''இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே போர்:'' அவசர நிலை பிரகடனம்! -பிரதமர் அறிவிப்பு

isrel- Palestine
இஸ்ரேல் நாட்டின் மீது 7 ஆயிரம் ராக்கெட்டுகளை  ஏவி பாலஸ்தீன ஆதரவு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் குழு இஸ்ரேல் குழு இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலை இன்று காலை முதல் நடத்தி வருகிறது.

ஆபரேசன் அல் அக்சா ஸ்டோர்ம்ன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது முதல் 20  நிமிடத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

இதையடுத்து மேலும்,  2 ஆயிரம் ராக்கெட்டுகள் ஏவியது. இதில் ஒரு இஸ்ரேலிய பெண்  உயிரிழந்தார்.

இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.