வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (10:27 IST)

எரிமலைப் பகுதி நீர்த்தேக்கங்களில் பலகோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி கண்டுபிடிப்பு

நியூசிலாந்திலுள்ள எரிமலைப் பகுதி நீர்த்தேக்கங்களில் பலகோடி மதிப்பிலான  தங்கம், வெள்ளி இப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்தின் டூபாவ் எரிமலைப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு அடியில் தங்கமும், வெள்ளியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச புவியியல் வல்லுநர் குழு, புவியின் உட்புறத்தில் இருக்கும் வெப்பத்தைப் பற்றி இந்தப் பகுதியில் ஆய்வு செய்துகொண்டிருந்து. அப்போது இந்தப் பகுதியில் தங்கம், வெள்ளி ஆகியவை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
 
ஆனால், இந்த நீர்த்தேக்கங்கள் எரிமலைகளுக்கு அடியில் இருப்பதால் அதன் கீழ் அடுக்குகளில் உள்ள வெப்பம் காரணமாக அங்கிருந்து இந்த உலோகங்களை வெளியில் கொண்டுவர முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இந்த தங்கத்தை வெளிக்கொண்டுவர முடியுமானால் ஆண்டுக்கு, 2.71 மில்லியன் டாலரில் இருந்த 3.6 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.