1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (21:09 IST)

சிலி நாட்டில் எரிமலை வெடித்து சிதறியது - [வீடியோ மற்றும் புகைப்படங்கள்]

சிலி நாட்டில் வல்லாரிகா எரிமலை வெடித்து சிதறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

 
சிலி நாட்டின் தென்பகுதியில் அமைந்திருக்கும் வில்லாரிகா என்ற எரிமலை நேற்று முன்தினம் பாலையில் வெடித்தது. செவ்வாய்க் கிழமை அதிகாலையில் இந்த எரிமலை குமுறத் தொடங்கியது.
 

 
இதையடுத்து, எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கும் அதிகாரிகள், எரிமலைக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றி வருகின்றனர்.
 

 
அருகிலிருக்கும் ப்யூகோன் நகர மக்கள் அமைதியாக வெளியேறி வருவதாக அந்நகர முதல்வர் தெரிவித்துள்ளார். 2ஆயிரத்து 840 மீற்றர் உயரமுள்ள இந்த வில்லாரிகா எரிமலை, எப்போதும் உயிர்ப்புடன் உள்ள எரிமலையாகும். அதன் மையத்தில் எரிமலைக் குழம்பு நிரம்பிய ஏரியும் இருந்தது. மலையேறுபவர்கள் அதிகம் வந்து செல்லும் மலை இது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதற்கு முன்பாக 1985ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித் துள்ளதாக சிலியின் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் மட்டும், மலைச் சரிவில் வழியும் சாம்பலில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

 
ப்யூகான், கனரைப் நகரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக;கையாக காலி செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு, அது மீண்டும் அமைதியடைந்ததாக ப்யூகான் நகர முதல்வர் கார்லோஸ் பர்ரா தெரிவித்துள்ளார்.
 

 
"இப்போது சாம்பலோ, லாவா குழம்பு வழிவதோ இல்லை. முழுமையாக அமைதியாகவிட்டது\" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோ கீழே: