திருடன் விஜய்மல்லையா, வெளியே போ! இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி!


sivalingam| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:01 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ள பிரபல தொழிலபதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


 


இந்த நிலையில் இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த விஜய்மல்லையா, இந்தியா விளையாடும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வந்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டிகளில் கலந்து கொண்ட விஜய்மல்லையா இன்று தென்னாப்பிரிகா அணியுடன் மோதிய போட்டியை காண வந்திருந்தார்.

அந்த சமயத்தில் இந்திய ரசிகர்கள் திருட்டுப்பயலே விஜய்மல்லையா, மைதானத்தைவிட்டு வெளியே போ என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :