1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:37 IST)

டிமிக்கி கொடுத்து வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது....

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல், லண்டலின் பதுங்கியிருந்த விஜய் மல்லையாவை ஸ்கார்ட்லாந்து போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.


 

 
விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திருப்பி செலுத்த வில்லை. எனவே, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் லண்டன் தப்பி சென்றார். 
 
எனவே, அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது தொடர்பாக ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசாரின் உதவியை நாடியது. 
 
இதையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, விரைவில் அவர் இந்தியாவிற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.