வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (01:31 IST)

சிறந்த டிரைவராக உதவும் வீடியோ கேம்

தொடுதிரையில் வீடியோ கேம் விளையாடுபவர்களைவிட, இணைப்புக் கருவியின் உதவியுடன் விளையாடியவர்களுக்கு டிரைவிங் திறமை அதிகரிப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



 
 
இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டுவதாக பொதுவாகவே குறை கூறுவது உண்டு. ஆனால் குறிப்பிட்ட மாதிரியான வீடியோ கேம் விளையாட்டுகளை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு திறம்பட டிரைவிங் செய்யும் திறமை அதிகரிப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
 
ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காய் நகரில் செயல்படும் நியூயார்க் பல்கலைக்கழக கிளை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். தொடுதிரையில் வீடியோ கேம் விளையாடுபவர்களைவிட, இணைப்புக் கருவியின் உதவியுடன் விளையாடியவர்களுக்கு டிரைவிங் திறமை அதிகரிப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்