வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (09:36 IST)

புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி.. இறுதிக் கட்டத்தில் விஞ்ஞானிகள்! – ரஷ்ய அதிபர் அளித்த நம்பிக்கை!

உலகம் முழுவதும் மக்கள் பலர் உயிரை காவு வாங்கும் நோயாக புற்றுநோய் இருந்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிப்பின் இறுதிக்கட்டத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் நெருங்கியுள்ளனர்.



நவீன உலகில் அதிகமான மக்களை பாதிக்கும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. உடலுக்கு நமக்கு தெரியாமலே வளரும் இந்த புற்றுநோய் செல்கள் நாளடைவில் உயிரை குடிக்கும் நோயாக மாறிவிடுகிறது. நவீன மருத்துவ முறைகளில் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மூலமாக புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டாலும் அவை பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில் புற்றுநோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ உலக நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற எதிர்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அந்த பணி நிறைவடைந்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். இதன்மூலம் ரஷ்ய அறிவியலாளர்கள் புதிய வரலாறு படைக்க உள்ளனர்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் எந்த விதமான புற்றுநோய்களுக்கு இந்த மருத்து தீர்வளிக்கும் உள்ளிட்ட விவரங்களை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K