வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:38 IST)

அமெரிக்கா: மிக்சிசன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு-3 பேர் பலி

America
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்ககள் பலியாகினர்.

அமெரிக்க  நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், இதனால் குழந்தைகள் முதல்  பெரியோர் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  நேற்றிரவு மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்திற்குள் நேற்றிரவு புகுந்த ஒரு கறுப்பின இளைஞன், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் ,5மாணவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தாக்குதல் நடத்திய பெர்கி அரங்கம் என்பவரை கைது செய்துள்ளனர்.