1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:14 IST)

இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்! – அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் படுக்கை வசதி போதாமை, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு இந்த அவசர காலக்கட்டத்தில் உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய மக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.