இனிமே படுக்கைய தள்ளி போட வேண்டியதுதான்! – அமெரிக்காவில் பெண்கள் நூதன போராட்டம்!
அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் மேற்கொண்டுள்ள நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கருக்கலைப்பு சட்ட விரோதமானதாக இருந்து வருகிறது. அமெரிக்காவிலும் மாகாணத்தை பொறுத்து இந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டு. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் வயிற்றில் சிசுவின் இதயதுடிப்பு கேட்க தொடங்குவதற்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் 6 வார காலத்திற்குள் கருவுற்றிருப்பதே பெண்கள் பலருக்கு தெரிய வர வாய்ப்பில்லை என்பதால் இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆண்கள் தங்களுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது என “செக்ஸ் ஸ்ர்டைக்கையும் அறிவித்துள்ளனர். இந்த நூதன போராட்டத்திற்கு நடிகையும், பாடகியுமான பேட் மில்லர் அழைப்பு விடுத்துள்ளார்.